search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை 210 ரன்கள் குவிப்பு
    X

    வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை 210 ரன்கள் குவிப்பு

    வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை அதிரடியாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது. #BANvSL
    வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் குணதிலகா, குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் ஆட்டத்தால் பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் இலங்கை 63 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி இலங்கை அணி 11 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. குணதிலகா 37 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெரேரா அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடி குசால் மெண்டிஸ் 42 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.


    37 பந்தில் 42 ரன்கள் சேர்த்த குணதிலகா

    அடுத்து வந்த உபுல் தராங்கா 13 பந்தில் 25 ரன்னும், ஷனகா 11 பந்தில் 30 ரன்களும் அடிக்க இலங்கை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

    பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது. முதல் போட்டியில் வங்காள தேசம் தோல்வியடைந்திருந்ததால் இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்கும்.
    Next Story
    ×