search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. பெண்கள் சாம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
    X

    ஐ.சி.சி. பெண்கள் சாம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    ஐ.சி.சி. பெண்கள் சாம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
    ஐ.சி.சி. பெண்கள் சாம்பயின்ஷிப் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் ஹெய்ன்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. வின்பீல்டு (48), டெய்லர் (34), சிவர் (36) ஆகியோரின் ஆட்டத்தில் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தாலும் அந்த அணியின் பிளாக்வெல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

    ஹீலே 18 ரன்னும், பெர்ரி 20 ரன்னும், விலானி 38 ரன்னும், ஹெய்ன்ஸ் 30 ரன்னும் எடுத்தனர். இவர்கள் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 26-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×