search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங்: இலங்கை சாதனை
    X

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங்: இலங்கை சாதனை

    ஜிம்பாப்வேக்கு எதிரான 391 ரன்களை சேஸிங் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது.
    கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் இலக்காக நி்ர்ணயித்தது ஜிம்பாப்வே. இந்த ரன்னை இலங்கை அணி 114.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்து அபாரமாக சேஸிங் செய்தது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இதற்கு முன் 2003-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 7 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்ததுதான் மிகப்பெரிய சேஸிங் ஆகும். அதன்பின் 2008-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் எடுத்துள்ளது. 1976-ல் இந்தியா வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்கள் எடுத்துள்ளது. 1948-ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆசிய மண்ணில் இதுதான் மிகச்சிறந்த சேஸிங் ஆகும். 2008-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 387 ரன்னை சேஸிங் செய்துள்ளது. பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக 2015-ல் 377-ஐ சேஸிங் செய்துள்ளது. 2006-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை 352-ஐ சேஸிங் செய்துள்ளது. 1998-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை 326 ரன்களை சேஸிங் செய்துள்ளது.
    Next Story
    ×