search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடம்: கேப்டன் விராட் கோலிக்கு கதாயுதம் பரிசு
    X

    டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடம்: கேப்டன் விராட் கோலிக்கு கதாயுதம் பரிசு

    டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்ததையொட்டி ஐ.சி.சி வழங்கிய கதாயுதத்தை கேப்டன் விராத் கோலி பெற்றார்.
    தரம்சாலா:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வென்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

    டெஸ்ட் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறதோ, அந்த அணிக்கு ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன் எனும் அந்தஸ்தை அளித்து அதற்கு ஏற்றார் போல ஒரு கதாயுதத்தை கொடுப்பார்கள். மேலும், பரிசுத் தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும்.( இந்திய மதிப்பில் சுமார் 6.5 கோடி ரூபாய்)

    இந்த ஆண்டில் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு அந்த கவுரவம் கிடைத்துள்ளது. இதையொட்டி, ஐ.சி.சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கதாயுதத்தை விராட் கோலியிடம் வழங்கினார்.



    மேலும், 2016-ம் ஆண்டில் ஜொலித்த சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார்.
    Next Story
    ×