search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்லெட்ஜிங், திறமை என இரண்டிற்கும் திட்டம் வைத்துள்ளோம்: ரகானே சொல்கிறார்
    X

    ஸ்லெட்ஜிங், திறமை என இரண்டிற்கும் திட்டம் வைத்துள்ளோம்: ரகானே சொல்கிறார்

    ஸ்லெட்ஜிங் அல்லது திறமை அடிப்படையில் என எதுவாக இருந்தாலும் அதற்கேற்றபடி திட்டம் தீட்டியுள்ளோம் என ரகானே தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 23-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டி புனேயில் நடக்கிறது. இதற்கான இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த தொடர் குறித்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரகானே கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா அணி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்களா, இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது. ஆஸ்திரேலியா வீரர்களின் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தனித்தனியாக திட்டம் வகுத்துள்ளோம்.

    திறமையை பொறுத்தா அல்லது ஸ்லெட்ஜிங் பொறுத்தா என்பது இங்கே என்னால் விவரிக்க முடியாது. ஆனால் ஆடுகளத்திற்கான திட்டம் உறுதியாக உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதியான மனநிலையுடன் விளையாடுவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு திட்டத்திலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

    நாங்கள் நேர்மறையான கிரிக்கெட் விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். அதேபோல் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மட்டுமல்ல, எல்லா பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். பயிற்சி ஆட்டத்திற்கும், டெஸ்ட் போட்டிக்கும் முற்றிலும் வித்தியாசம் உள்ளது. ஆகவே, அன்றைய தினத்தின் சூழ்நிலையை உணர்ந்து, அதற்கேற்றபடி விளையாடுவோம். இதுதான் எங்களது முக்கிய நோக்கமாகும்” என்றார்.
    Next Story
    ×