search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2016-ம் ஆண்டின் கோல்டன் டுவீட் இதுதான்
    X

    2016-ம் ஆண்டின் கோல்டன் டுவீட் இதுதான்

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவாக பதிவு செய்த டுவீட் 2016-ம் ஆண்டின் கோல்டன் டுவீட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையேயான காதல் அனைவரும் அறிந்தது தான். 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டி20 அரையிறுதிப் போட்டிக்கு முன் விராட் கோலி ஒரு டுவீட் செய்திருந்தார்.

    அதில் "அனுஷ்கா சர்மாவைக் கேலி செய்பவர்களைக் கண்டு அருவருப்படைகிறேன். அவர் எனக்கு பாசிட்டிவ் ஆகத்தான் இருக்கிறார்'' என்று கோபத்துடன் டுவீட் செய்தார். அனுஷ்கா சர்மாவைக் கிண்டல் செய்தவர்களைத் திட்டி விராட் கோலி செய்திருந்த இந்த டுவீட் 39,732 ரீ-டுவீட்களையும், 1,07,232 லைக்குகளையும் பெற்றிருந்தது.

    இந்நிலையில் இந்தியாவின் 'கோல்டன் டுவீட்' ஆக இந்த டுவீட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரின் தெற்காசிய பிரிவு மேலாண்மை இயக்குநர் மாயா ஹரி உறுதி செய்துள்ளார்.
    Next Story
    ×