search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கருத்து: பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூசுப் அதிருப்தி
    X

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கருத்து: பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூசுப் அதிருப்தி

    தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூசுப் அதிருப்தி தெரிவித்துள்ளார்
    கராச்சி:

    தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘அனுராக் தாகூர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எங்களுடன் முறைப்படியான நேரடி தொடர்களில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்து வருகிறது. இரு நாட்டு உறவு மேம்பட்டு இருந்த சமயத்திலும் கூட எங்களுடன் விளையாடுவதில் தயக்கம் காட்டினர்.

    கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் அரசியல் அல்லது அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அனுராக் தாகூர் அரசியல் அறிக்கை விடுத்து வருகிறார். அவர் பாரதீய ஜனதா கட்சி தலைவராக பேசுகிறாரா? அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பேசுகிறாரா? என்பது தெரியவில்லை’ என்றார். 
    Next Story
    ×