search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்
    X

    3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

    வெஸ்ட்இண்டிசில் நடந்த 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் 58 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டிசை வீழ்த்தியது.
    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன் குவிந்தது. மேத்யூவாடே 57 ரன்னும்,ஆரோன் பிஞ்ச் 47 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஸ்மித் 46 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர், கேப்ரியல் தலா 2 விக்கெட் எடுத்தனர். பிராத்வொயிட், பொல்லார்டு, நரேன், பென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 45.4 ஓவரில் 212 ரன்னில் கருணா சார்லஸ் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். ரம்டின் 40 ரன்கள், ஹோல்டர் 34 ரன்கள், நரேன் 23 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிளெட்சர், பிராவோ, சாமுவேல்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாசில்வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
    Next Story
    ×