search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி: அபிநந்தனை கேலி செய்யும் பாகிஸ்தான் ஊடக விளம்பரம்
    X

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி: அபிநந்தனை கேலி செய்யும் பாகிஸ்தான் ஊடக விளம்பரம்

    இந்திய விங் கமெண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புது டெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இரு முறை களம் சந்தித்து மகத்தான வெற்றி பெற்றது.

    இதனையடுத்து வரும் 16ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான விளம்பரங்களை பாகிஸ்தான் ஊடகம் ஒளிபரப்பியது. இந்த விளம்பரம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விளம்பரத்தில் இந்திய விங் கமெண்டர் அபிநந்தனைப் போல மீசை வைத்துக் கொண்டு ஒருவர் வருகிறார்.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்தியாவின் உத்தி என்ன? என அவரிடம் கேள்வி  கேட்கப்படுகிறது. அதற்கு அந்த நபர், இது குறித்து உங்களிடம் நான் கூற முடியாது.மன்னிக்கவும் என பதில் கூறுகிறார்.



    அவர் பேசும்போது கையில் டீ கப் ஒன்றும் உள்ளது. மேலும் அந்த நபர் இந்திய அணியின் நீல நிற ஜெர்சி அணிந்துள்ளார். இந்த விளம்பரத்தின் இறுதியில் ‘#LetsBringTheCupHome’ எனும் ஹேஷ்டாக் வருகிறது.

    இந்த வீடியோ, விங் கமெண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது அவர் டீ அருந்துவது போன்ற வீடியோ வைரலாக பரவியது. இதனை மையப்படுத்தியே இப்போது இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கமளிக்க வலியுறுத்தியும் சில அமைப்பினர் கூறியுள்ளனர். இந்த விளம்பர வீடியோ இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×