search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோ
    X

    மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோ

    மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்களின் உதவியுடன் தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

    மதியம் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



    உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும் மோசமான வானிலை மற்றும் மலைப்பாங்கான பகுதி ஆகிய காரணங்களால் விமானத்தை  தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக விமானத்தை தேடும்பணியை முடக்கிவிட்டுள்ளது. இவ்வகை செயற்கைக்கோள்கள் மோசமான வானிலையிலும் ரேடார் உதவியுடன் அதிநவீன புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.      
    Next Story
    ×