search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அது பொய் செய்தி அதை நம்பாதீர்கள் - ஜம்மு காஷ்மீர் வங்கி விளக்கம்
    X

    அது பொய் செய்தி அதை நம்பாதீர்கள் - ஜம்மு காஷ்மீர் வங்கி விளக்கம்

    ஜம்மு காஷ்மீர் வங்கி பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்தது பற்றி பரவிய பொய் செய்திக்கு வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



    ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணிபுரிய அதிகாரிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியுற்றோர் மத்தியில், ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தோல்வியுற்றோர் தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள் சார்பில் வங்கி பணிகளில் சேர பின்பற்றப்பட்ட ஆட்சேர்ப்பு முறைகளில் முழு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தன. இதற்கு ஜம்மு காஷ்மீர் வங்கி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வங்கி பணிகளில் சேர்வதற்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு பற்றி போட்டியாளர்களிடையே பொய் தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு பரப்பப்படும் தகவல்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. வங்கி பணிகளுக்கு தேவைப்படும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் சிறப்பு ஆணையம் பரிந்துரைத்த விதிகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர்.



    அந்த வகையில் ஆட்சேர்ப்பு வழிமுறைகளில் சிறப்பு ஆணையத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. ஆன்லைன் தேர்வில் ஆணையத்தின் விதிகள் முறையே பின்பற்றப்பட்டு அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வங்கி பணிகளி்ல் ஆட்சேர்ப்பு முறைகளில் நடைபெற்ற முழு வழிமுறைகளும் பொதுவாகவே பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் விண்ணப்பதாரர்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் ஆதாரமற்ற விவரங்களை நம்ப வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
    Next Story
    ×