search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானின் ஏஜென்ட் சித்து - ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேட்டி
    X

    பாகிஸ்தானின் ஏஜென்ட் சித்து - ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேட்டி

    பஞ்சாப் மந்திரியும், பிரபல கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் நாட்டு ஏஜென்ட் என மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம்சாட்டியுள்ளார். #HarsimratBada #NavjotSidhu #Pakistanagent
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியும், பிரபல கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

    குறிப்பாக, புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு நம் நாட்டினரிடையே அதிகரித்துள்ளது.

    இந்நிலையில்,  நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் நாட்டு  ஏஜென்ட் என மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.



    கர்தார்பூரில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் பாதையை உருவாக்கியதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நான் வைத்திருந்த நட்புறவு உதவிகரமாக இருந்ததாக சித்து கூறி வருகிறார். பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கான பணிகளை அவர் செய்ததாகவே இருக்கட்டும். ஆனால், இந்தியா தரப்பில் இதற்கான அனுமதியை நாங்கள்தான் வழங்கினோம்.

    அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். பாகிஸ்தான் நாட்டு  ஏஜென்ட்டாகிவிட்ட சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசித்தானே ஆக வேண்டும்.

    பஞ்சாப் பிரிக்கப்பட்டது என்றால் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முடிவின்படி அது நடந்தது. அப்போது கர்தார்பூர் பகுதியை பஞ்சாப்புடன் இணைத்திருக்கலாம். ஆனால், சீக்கியர்களை ஒடுக்குவதற்காகவும் சிறுமைப்படுத்துவதற்காகவும் பஞ்சாப்பை நேரு உடைத்தார். அவருக்குப்பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி பொற்கோவில் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தினார்.

    1984-ம் ஆண்டு நமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு இன்று நீதி கிடைக்கும் வகையில் கர்த்தார்ப்பூர் சிறப்புப் பாதை அமைக்கப்படுகிறது. இதை நிறைவேற்றித்தரும் பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நீங்கள் (பஞ்சாப் மக்கள்) ஆதரவு அளிக்காவிட்டால், காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குடும்பம் கர்த்தார்ப்பூர் சிறப்புப் பாதை திட்டத்தை முடக்கிப் போட்டுவிடும் என ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

    சிரோன்மணி அகாலி தள் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியுமான சுக்பிர் சிங் பாதலின் மனைவியுமான  ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அரசில் உணவு பதப்படுத்துதல் துறையின் மந்திரியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #HarsimratBada #NavjotSidhu #Pakistanagent
    Next Story
    ×