search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் எத்தனை எதிரிகள் கொல்லப்பட்டனர்? என அறியும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு -சிவசேனா
    X

    பாகிஸ்தானில் எத்தனை எதிரிகள் கொல்லப்பட்டனர்? என அறியும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு -சிவசேனா

    பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதல் கொல்லப்பட்ட எதிரிகளின் எண்ணிக்கையை அறியும் உரிமை இந்திய மக்களுக்கு உண்டு என பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது. #righttoknow #IAFairstrikes #IAFairstrikescasualties #ShivSena
    மும்பை:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு உள்பட்ட பலகோட் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது நமது விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    மத்திய அரசுதரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால், மத்திய மந்திரிசபையில் இடம்பெறாத பாஜக தலைவர் அமித் ஷா, அந்த தாக்குதலில் சுமார் 250 கொல்லப்பட்டதாக சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதால் தற்போது இதுதொடர்பான சர்ச்சை தலைதூக்கியுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதல் கொல்லப்பட்ட எதிரிகளின் எண்ணிக்கையை  அறியும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு என பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவும் இன்று வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இன்று ஒரு தலையங்கக் கட்டுரை வெளியாகியுள்ளது.

    ‘பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு முன்னர் இருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. பல விவகாரங்களை புறந்தள்ளிவிட்டு தற்போது இந்த பிரச்சனையை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க தொடங்கியுள்ளன.

    பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலும் தேர்தல்வரை எதிரொலிக்கும். இந்திய விமானப்படை அங்கு நடத்திய தாக்குதலில் நமது எதிரிகளில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பதை அறிந்துகொள்ளும் உரிமை நம்மக்களுக்கு உண்டு. இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்பதால் நமது படைகளின் மனவலிமையை அவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக நாம் (சிவசேனா) கருதவில்லை’ என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #righttoknow #IAFairstrikes  #IAFairstrikescasualties #ShivSena
    Next Story
    ×