search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்க் கைதிகளை நடத்தும் விதம்- ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன?
    X

    போர்க் கைதிகளை நடத்தும் விதம்- ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது என்ன?

    போர்க் கைதிகளை நடத்தும் விதம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்து ஜெனிவா ஒப்பந்தத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. #GenevaConventions
    புதுடெல்லி:

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானி அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அவரை விடுவிப்பதற்காக இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, விமானப்படை வீரர் அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால் அபினந்தனை பாகிஸ்தான் எப்போது விடுவிக்கும் என்பது குறித்த தகவல் இன்றும் உறுதியாகத் தெரியவில்லை.



    போர் கைதிகள் குறித்தும் அவர்கள் உரிமை குறித்தும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

    * போர்க் கைதிகள் மனிதாபிமானத்துடன், எந்தவித நிற, மத, மொழிபாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும்.

    * அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவர்களை காயப்படுத்தவோ, ரகசிய தகவல்களுக்காக சித்ரவதை செய்யவோ கூடாது.

    * கண்ணியக் குறைவு ஏற்படுமாறு திட்டுவதோ, கீழ்த்தரமாக நடத்துவதோ கூடாது

    * போர் முடிந்தவுடன், எந்தவித பழிவாங்குதல் நடவடிக்கையும் இல்லாமல், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிணையக் கைதியாக பிடித்து வைக்க கூடாது.

    * போர்க்குற்றங்களில் ஈடுபட்டவராக இருந்தால், கைது செய்த நாடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்கு செல்லாது.

    * கைதிகளுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, சுகாதாரம், மருத்துவ சேவை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GenevaConventions
    Next Story
    ×