search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சரண் அடைந்தான்
    X

    ஒடிசாவில் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சரண் அடைந்தான்

    ஒடிசாவில் போலீசாரால் 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட், சரண் அடைந்துள்ளான். #MaoistSurrenders
    மால்கங்கிரி:

    ஒடிசாவின் மால்கங்கிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனஞ்செயா கோப்(27). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவன் மீது கொலை, சாலை பராமரிப்பு வாகனங்களுக்கு தீவைப்பு, அலுவலகங்களில் குண்டு வைப்பு, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 27 குற்றச்செயல்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும், தனஞ்செயா கோப் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மால்கங்கிரி போலீசார் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் தனஞ்செயா கோப், கோராபுட் காவல் நிலையத்தில் நேற்று டிஐஜி ஹிமான்சு லால் முன்னிலையில் சரணடைந்தான்.

    இதனையடுத்து மாநில அரசின் மறு வாழ்வு திட்டத்தின்படி, கோப்பிற்கு பண உதவி மற்றும் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும் கோப் சரணடைந்து, சமூகத்துடன் ஒன்றி வாழ விருப்பம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.   2009ம் ஆண்டு  மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த கோப், ஆந்திரா- ஒடிசா எல்லைப்பகுதியில் உள்ள கலிமேலா பகுதியில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. #MaoistSurrenders

    Next Story
    ×