search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலே‌ஷ் யாதவ் மீது முலாயம் சிங் அதிருப்தி
    X

    பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலே‌ஷ் யாதவ் மீது முலாயம் சிங் அதிருப்தி

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடங்களை தந்ததில் தான் வருத்தம் அடைந்தாக சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். #ParliamentElection #AkileshYadav #MulayamSinghYadav
    லக்னோ :

    நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கிற அளவுக்கு 80 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம், உத்தரபிரதேசம். அங்கு எதிர் எதிர் துருவங்களில் இருந்து வந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இது அரசியல் அரங்கை அதிர வைப்பதாக அமைந்தது.

    மகன் அகிலே‌ஷ் யாதவ் அமைத்துள்ள இந்த கூட்டணி குறித்து, சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.



    இதுபற்றி அவர் லக்னோவில் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடங்களை தந்ததில் நான் வருத்தம் அடைந்தேன்’’ என கூறினார்.

    பாராளுமன்றத்தில் சமீபத்தில் முலாயம் சிங் பேசியபோது, நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று வாழ்த்தியது நினைவுகூரத்தக்கது. #ParliamentElection #AkileshYadav #MulayamSinghYadav
    Next Story
    ×