search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தொடரும் வருமான வரி சோதனை -  7 லாக்கர்களில் இருந்த ரூ.4.94 கோடி பறிமுதல்
    X

    டெல்லியில் தொடரும் வருமான வரி சோதனை - 7 லாக்கர்களில் இருந்த ரூ.4.94 கோடி பறிமுதல்

    டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள தனியார் லாக்கர்களை திறந்து வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் நேற்று மேலும் 4.94 கோடி ரூபாய் சிக்கியது. #DelhiITRaid #ChandniChowk
    புதுடெல்லி:

    டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் ஹவாலா பணப்பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தனியாருக்கு சொந்தமான லாக்கர்களில் ஹவாலா தரகர்கள் தங்கள் பணத்தை வைப்பதும் அதை அடுத்தவர்கள் எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்குள்ள லாக்கர்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.



    இந்த சோதனையில் கட்டுக்கட்டாக, புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று மேலும் 7 லாக்கர்கள் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அந்த லாக்கர்களில் இருந்த ரூ.4.94 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

    இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 35.34 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஏராளமான லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளதால், மேலும் பல கோடி பணம் சிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #DelhiITRaid #ChandniChowk
    Next Story
    ×