search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிபுரா மாநில சபாநாயகர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி
    X

    திரிபுரா மாநில சபாநாயகர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி

    திரிபுரா மாநில சட்டசபை சபாநாயகரான ரேபதி மோகன்தாஸ் வங்கி கணக்கில் இருந்து வங்கி அதிகாரி போல பேசி பணம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். #TripuraSpeaker #RebatiMohanDas
    அகர்தலா:

    வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வங்கி அதிகாரி போல பேசி, அவர்களின் கணக்கு பற்றிய விவரங்கள் மற்றும் ஏ.டி.எம். கடவுச்சொல் (பின் நம்பர்) போன்றவற்றை பெற்று மோசடி செய்யும் ஆசாமிகள் அதிகரித்து உள்ளனர். இவர்களிடம் அப்பாவி மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர்.

    அந்தவகையில் திரிபுரா மாநில சட்டசபை சபாநாயகரான ரேபதி மோகன்தாசும் இத்தகைய மோசடி பேர்வழிகளிடம் சிக்கியுள்ளார். நேற்று முன்தினம் மாலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) வாடிக்கையாளர் நல மேலாளர் என அறிமுகப்படுத்தினார்.

    பின்னர் ரேபதி மோகன்தாசின் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று கூறிய அவர், அது குறித்த விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் இருந்தவாறே சபாநாயகரால் பேச முடியாததால், தனது மகனுக்கு அந்த அழைப்பை மாற்றி விட்டார். எனவே அந்த ஆசாமி சபாநாயகரின் மகனிடம் பேசினார்.

    அப்போது அவரின் வங்கிக்கணக்கு மற்றும் ஏ.டி.எம். கடவுச்சொல்லையும், தந்தையின் (சபாநாயகர்) ஏ.டி.எம். கடவுச்சொல்லையும் வாங்கிக்கொண்டார். சில நிமிடங்களில் இரு கணக்குகளில் இருந்தும் ரூ.61 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர் போலீசில் புகார் செய்தார். அவர்கள் அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முன்னதாக மாநில அரசு வக்கீலின் வங்கி கணக்கில் இருந்தும் இதைப்போல ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×