search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-ரஷியா இடையே சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
    X

    இந்தியா-ரஷியா இடையே சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து

    அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா மற்றும் ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #PutininIndia #S-400 #IndiaRussiaDefenceSystem
    புதுடெல்லி :

    இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

    இதற்கிடையே, ஐதராபாத் இல்லத்தில் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் ரஷியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்த சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு நடைபெற்றது, அப்போது ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    எதிரிநாடுகளின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமார் 400 கிமீ சுற்றளவில் வான்வெளியில் தாக்கி அழிக்கும் வல்லமையுடைய எஸ்- 400 எனும் ஏவுகணைகள் 5 வாங்குவதற்கும், போர் துப்பாக்கி மற்றும் போர் கப்பல்கள் வாங்கவும் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    மேலும், 2022 ஆண்டுக்குள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இஸ்ரோ தயாராகி வரும் நிலையில் விண்வெளித்துறையில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆராய்சி மையத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



    விண்வெளிக்கு ரஷிய வீரர்களை அனுப்பும் போது அவர்களுடன் இந்திய வீரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது ஆலோசனை நடத்தப்பட்டது.

    சைபீரிய எல்லைக்கு அருகே ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. #PutininIndia #S-400 #IndiaRussiaDefenceSystem
    Next Story
    ×