search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்-400 ஏவுகணை, கச்சா எண்ணெய் கொள்முதல் - அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கிறது இந்தியா
    X

    எஸ்-400 ஏவுகணை, கச்சா எண்ணெய் கொள்முதல் - அமெரிக்காவிடம் விதிவிலக்கு கேட்கிறது இந்தியா

    ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கவும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. #S-400 #IndiaRussiaDefenceSystem #IranSanction
    புதுடெல்லி :

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடி மற்றும் புதின் இடையிலான சந்திப்பின் போது இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    ஆனால், ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என நட்பு நாடுகளுக்கு அமெரிகா நேற்று எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்காக நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

    இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் மட்டத்திலான 2+2 சந்திப்பின் போது ரஷியா மற்றும் ஈரான் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியது. ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என அமெரிக்கா தரப்பில் மழுப்பலான பதில் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தொடர்ந்து அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.



    இந்நிலையில்,  ஈரான் மற்றும் ரஷியா நாடுகளுடனான வர்த்தகத்தை தொடர இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும், என அமெரிக்காவுக்கு இந்தியா மீண்டும்  கோரிக்கை வைத்துள்ளது.  

    இதுதொடர்பாக மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ’இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இந்தியாவின்  கவலைகளை புரிந்துகொள்ளும் எனும் நம்பிக்கை உள்ளது. ரஷியாவிடம் இருந்து ஏவுகணை எதிர்பு எஸ்-400 ஆயுதங்களை கொள்முதல் செய்யவும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவும் அமெரிக்கா விதிவிலக்கு வழங்கும்’ என அந்த  அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

    ஒருவேலை இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான இயற்கையான நட்பில் விரிசல் ஏற்பட்டு அமெரிக்காவின் எதிரி நாடுகளாக கருதப்படும் சீனா மற்றும் ரஷியாவுடன் இன்னும் நெருங்கி பழகும் வாய்ப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்திவிடும். அது அமெரிக்காவுக்கு எதிரானதாக அமையும் இத்தகைய தவறை அமெரிக்கா செய்யாது எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. #S-400 #IndiaRussiaDefenceSystem #IranSanction
    Next Story
    ×