search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை சுட்டு கொன்றுவிட்டு 5 சிறுவர்கள் தப்பியோட்டம்
    X

    பீகார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை சுட்டு கொன்றுவிட்டு 5 சிறுவர்கள் தப்பியோட்டம்

    பீகார் மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 5 சிறுவர்கள் சேர்ந்து காவலாளியை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெறும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

    அவ்வாறு அடைத்து வகைப்பட்ட சிறுவர்கள் 5 பேர் ஒன்றாக சேர்ந்து காவலாளி மற்றும் சக சிறுவன் என இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புர்னியா சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கியிருந்த 5 சிறுவர்கள், திடீரென அப்பள்ளியின் காவலாளி விஜேந்திர குமார் மற்றும் சக தண்டனை சிறுவர் சரோஜ் குமார் ஆகிய இரண்டு பேரை துப்பாக்கியால் நேற்று சுட்டுகொன்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

    இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் விஷால் சர்மா கூறுகையில், தப்பியோடிய சிறுவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்களுக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சக சிறுவர்கள் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். 
    Next Story
    ×