search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணவீக்கத்தை போலவே பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது - லாலு பிரசாத் யாதவ்
    X

    பணவீக்கத்தை போலவே பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது - லாலு பிரசாத் யாதவ்

    நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பது போலவே பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். #LaluPrasadYadav #FuelPrice #BharatBandh
    பாட்னா :

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. 

    ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ட்விட்டரில் கவிதை நடையில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது போலவே பெட்ரோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் இயலாமை ஒவ்வொரு சாமாணிய இந்தியரையும் கடுமையாக பாதித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். #LaluPrasadYadav  #FuelPrice #BharatBandh
    Next Story
    ×