search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது எப்.ஐ.ஆர் பதிவு
    X

    சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது எப்.ஐ.ஆர் பதிவு

    அரியானா மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அம்மாநில காவல் நிலையத்தில் இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #RobertVadra
    சண்டிகர் :

    அரியானா மாநிலத்தில் 2005 முதல் 2014 வரை பூபிந்தர்சிங் ஹுடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விதிமீறல் இருப்பதாக புகார் கூறப்பட்டது. சிஹி, சிக்கந்தர் பூர்படா, சிகோபூர் ஆகிய கிராமங்களில் நிலங்களுக்கு பட்டா வழங்கியதிலும், வீட்டு பயன்பாட்டு உரிமம், வர்த்தக உரிமம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது.

    வதேராவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், , அரசு நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து வதேரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அரியானா முதல்வர் கட்டார் கடந்த 2015-ம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைத்தார்.

    இந்நிலையில், நில முறைகேடு தொடர்பாக ராபர்ட் வதேரா, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹுடா, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி மற்றும் டி.எல்.எப் ஆகிய நிறுவனங்களின் இயக்குனர்களின் மீது இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியான இணை காவல் ஆணையர் ராஜேஷ் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், ’ நில மோசடி நடைபெற்றது தொடர்பாக சுரிந்தர் சர்மா எனும் நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வதேரா மற்றும் ஹுடா உள்ளிட்டோர் மீது கெர்கி தவுலா காவல் நிலையத்தில் இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

    ஆனால், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வதேரா ‘ பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இப்போது தேர்தல் நேரம் என்பதால் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப 10 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட விஷயத்தில் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார். #RobertVadra
    Next Story
    ×