search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில் நகை விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட்டு உத்தரவு
    X

    திருப்பதி கோவில் நகை விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட்டு உத்தரவு

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள நகை, ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருள்களின் விவரங்களை சமர்ப்பிக்க ஐதராபாத் ஐகோர்ட்டு 4 வார காலக்கெடு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. #TirupatiTemple
    திருப்பதி:

    ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ள ரகசிய நிலவறையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக முன்னாள் தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அவ்வாறு ஏழுமலையான் கோவிலுக்கு நிலவறைகள் ஏதும் இல்லை என தேவஸ்தானம் மறுத்தது.

    இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த அனில் மற்றும் கோயல் ஆகியோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஏழுமலையானிடம் உள்ள ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருள்கள், தேவஸ்தானத்தின் வருவாய் உள்ளிட்டவற்றை அறியும் உரிமை அனைவருக்கும் உள்ளது என ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

    அதை விசாரித்த நீதிபதிகள், தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்த விரிவான அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தனர். அந்த வழக்கின் 3-ஆம் கட்ட விசாரணை நேற்று நடந்தது ஆனால் நீதிபதிகள் உத்தரவின்படி, தேவஸ்தானம் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.

    அறிக்கையை தயார் செய்ய மேலும் காலக்கெடு அளிக்கும்படி தேவஸ்தானம் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டது.

    அதன்படி, அறிக்கையை சமர்ப்பிக்க 4 வார காலக்கெடுவை அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, 4 வார காலத்துக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். #TirupatiTemple

    Next Story
    ×