search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மழை வெள்ள சேத மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி - நிதித்துறை கணக்கெடுப்பில் தகவல்
    X

    கேரளாவில் மழை வெள்ள சேத மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி - நிதித்துறை கணக்கெடுப்பில் தகவல்

    கேரளாவில் மழை வெள்ள சேத மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி என்று நிதித்துறை கூறி உள்ளது. அதிகபட்சமாக சேதமான சாலைகள் சீரமைப்புக்கு மட்டும் ரூ.4,500 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாள் பெய்த பேய் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது.

    மழை வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசின் அதிகாரிகள் முதல் கட்ட கணக்கெடுப்பு நடத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்த போது ரூ.20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டிருக் கும் என்றும் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதி தர வேண்டும் எனவும் கோரியது.

    மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.600 கோடி நிவாரண நிதி வழங்கியது. இதன் மூலம் மாநிலத்தில் முதல் கட்ட நிவாரண பணிகள் தொடங்கின.

    இந்த நிலையில் இப்போது மழை நின்று மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். பல இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டது. இதனால் மழையால் சேதமான சாலைகள், பாலங்கள் அவற்றின் சேதமதிப்பு தெரிய வந்துள்ளது.

    இது குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க மாநில நிதித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.



    கேரளாவில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரளாவிற்கு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி ஆகும் என்று நிதித்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    வருடாந்திர திட்ட மதிப்பீட்டின்படி 2018-2019-ம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்ட மதிப்பீடு ரூ.29,150 கோடி என்றும் இதில் மற்ற செலவினங்களையும் சேர்த்தால் ஆண்டு செலவினம் ரூ.37,273 கோடியாகும் என்று கணக்கிட்டு உள்ளனர்.

    தோராயமாக மாநில பாதிப்பு செலவினம் ரூ.35 ஆயிரம் கோடி என்று நிதித்துறை கூறி உள்ளது. அதிகபட்சமாக சேதமான சாலைகள் சீரமைப்புக்கு மட்டும் ரூ.4,500 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல மின்கம்பங்கள் முறிந்தது மற்றும் மின்சார கட்டமைப்பை சீரமைக்க மட்டும் ரூ.750 கோடி, குடிநீர் திட்டங்களுக்கு ரூ.900 கோடி செலவாகும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொச்சி விமான நிலைய சீரமைப்புக்கான நிதி பற்றிய அறிக்கை தயாராகவில்லை. அதுவும் தயாரானால் சேத மதிப்பு இன்னும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralaFloods

    Next Story
    ×