search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் உள்ள பிரதான கல்யாண கட்டா எதிரே மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை படத்தில் காணலாம்.
    X
    திருப்பதியில் உள்ள பிரதான கல்யாண கட்டா எதிரே மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை படத்தில் காணலாம்.

    திருப்பதியில் அனாதையாக கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை

    திருப்பதியில் அனாதையாக கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதியில் கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தற்போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    இரவில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வருகின்றனர். திருப்பதியில் பிரதான கல்யாண கட்டா எதிரே மைதானத்தில் ஒரு பச்சிளம் குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது.

    அங்கு, பாதுகாப்புபணியில் ஈடுபட்ட தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர். அப்போது மைதானத்தில் பஞ்சாலான படுக்கை விரிப்பில் வைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி திருமலை-1 டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசீலனை செய்தபோது, குழந்தையை வீசி சென்றவர்களின் உருவம் படக்காட்சிகளில் தெளிவாக தெரியவில்லை. இதனால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தை கள்ளக்காதலில் பிறந்திருக்கலாம் என போலீசாரும், தேவஸ்தான அதிகாரிகளும் சந்தேகிக்கின்றனர். அந்தக் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×