search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கனமழை - பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
    X

    கேரளாவில் கனமழை - பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 10 நாட்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஆழப்புழா, கோட்டயம் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 569 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 86 ஆயிரத்து 598 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த மே 29-ம்   தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு 107 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த ஜூலை 9-ம் தேதியில் இருந்து 2-வது முறையாக பெய்ய தொடங்கிய கனமழைக்கு இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×