search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பலியான சீக்கியர்களுக்காக பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை
    X

    ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பலியான சீக்கியர்களுக்காக பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான சீக்கியர்களுக்காக பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. #prayermeetatGoldenTemple #Jalalabadsuicidebombing
    சண்டிகர்:

    ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி நேற்று வந்திருந்தார். அவரை சந்தித்து பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர்கள் வந்திருந்தனர். திறப்பு விழா முடிந்ததும் அஷ்ரப் கானி சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினர்.

    இந்த குண்டுவெடிப்பில் 11 சீக்கியர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தாரை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.



    இந்நிலையில், ஜலாலாபாத் தாக்குதலில் உயிர்நீத்த 11 சீக்கியர்களின் ஆன்மா சாந்தியடைய பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்டர் நகரில் உள்ள பொற்கோயிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான சீக்கிய மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். #prayermeetatGoldenTemple #11Sikhsdead #Jalalabadsuicidebombing 
    Next Story
    ×