search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 48 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் - மேனகா காந்தி
    X

    வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 48 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் - மேனகா காந்தி

    இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார். #NRImarriages #ManekaGandhi
    புது டெல்லி :

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணத்தை பதிவு செய்ய எந்த வரைமுறையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 30 நாட்களில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா வழங்கப்படாது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

    மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின்படி வேளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து திருமணம் செய்த பின்னர் அவர்களின் வாழ்க்கை துணையை கைவிட்டு விட்டு மீண்டும் வெளிநாடு செல்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  #NRImarriages #ManekaGandhi
    Next Story
    ×