search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து நாளை அமைதிப் பேரணி - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு
    X

    முத்தலாக் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து நாளை அமைதிப் பேரணி - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு

    மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. #TripleTalaq #TripleTalaqBil
    ஜெய்ப்பூர்:

    ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தில் அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று அறிவித்துள்ளது.


    யாஸ்மின் பாரூக்கி

    இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளர் உம்ரைன் மஹ்பூஸ், இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு மட்டுமின்றி, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் முரணாக உள்ளது. இதனால் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

    முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இந்த மசோதா குடும்பங்களை உடைத்து விடும். குடும்ப அமைப்பை சிதைகும் வகையிலும், பெண்களுக்கான பிரச்சனைகளை அதிகரிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூர் நகரில் உள்ள சார் தர்வாஜா பகுதியில் இருந்து முசாபிர்கானா வரை நாளை முஸ்லிம் பெண்கள் அமைதிப் பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் யாஸ்மின் பாரூக்கி தெரிவித்துள்ளார். #TripleTalaq #TripleTalaqBil
    Next Story
    ×