search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.3,695 கோடியை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விக்ரம் கோத்தாரி கைது
    X

    ரூ.3,695 கோடியை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விக்ரம் கோத்தாரி கைது

    பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன், வட்டி ரூ.3,695 கோடியை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டார். #VikramKothari
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன், வட்டி ரூ.3,695 கோடியை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டார்.

    ரோட்டாமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி. இவர் 7 பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.2,919 கோடி கடன்கள் வாங்கினார். அந்த கடன்கள் இப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.3,695 கோடியாக உயர்ந்து உள்ளது.

    ஆனால் விக்ரம் கோத்தாரி இந்த தொகையை வேண்டும் என்றே செலுத்தவில்லை. மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கடன்கள் வாராக்கடன்கள் ஆகி உள்ளன.

    இது தொடர்பான புகாரின் பேரில், விக்ரம் கோத்தாரி மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து உள்ளன.

    சி.பி.ஐ. பதிவு செய்து உள்ள முதல் தகவல் அறிக்கையின்படி பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய 7 வங்கிகளுக்கு விக்ரம் கோத்தாரி வட்டியுடன் ரூ.3,695 கோடி திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.

    வங்கிகளை மோசடி செய்வதற்கு விக்ரம் கோத்தாரி சட்டத்துக்கு புறம்பான வழிகளை நாடி இருப்பது சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., விக்ரம் கோத்தாரியை கைது செய்து உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் மால் சாலையில் அமைந்து உள்ள அவரது அலுவலகம் மூடிக்கிடந்ததால் விக்ரம் கோத்தாரி தலைமறைவாகி விட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், இப்போது கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் கோத்தாரியின் நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விக்ரம் கோத்தாரி வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    அவர் ரூ.85 கோடி வரி ஏய்ப்பு செய்த வகையில், உத்தரபிரதேசத்தில் பல்வேறு வங்கிகளில் உள்ள அவரது 14 கணக்குகள் முடக்கப்பட்டன. அவற்றில் 11 கணக்குகள் ரோட்டாமேக் குழும நிறுவனங்கள் பெயராலும், 3 கணக்குகள் குடும்பத்தினரின் பெயராலும் அமைந்தவை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  #VikramKothari  #tamilnews 
    Next Story
    ×