search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் ஆட்சிக்கு வந்து முதல்வர் இல்லத்தில் கங்கை நீரை தெளிப்பேன் - அகிலேஷ் யாதவ் கிண்டல்
    X

    மீண்டும் ஆட்சிக்கு வந்து முதல்வர் இல்லத்தில் கங்கை நீரை தெளிப்பேன் - அகிலேஷ் யாதவ் கிண்டல்

    நான் மீண்டும் 2022-ம் ஆண்டு முதல்வரான பின்னர் தீயணைக்கும் வாகனத்தில் கங்கை நீரை கொண்டு வந்து முதல்வர் இல்லத்தில் தெளிப்பேன், என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநில முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் புனித நீரை தெளித்து யாகங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் செயற்குழு கூட்டம் லக்னோவில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன.



    இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் முதல்மந்திரியுமான அகிலேஷ் யாதவ், “2022-ம் ஆண்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கங்கை நீரை தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்து முதல்வர் இல்லத்தில் தெளிப்போம். முதல்மந்திரி யோகி என்னை விட ஒரு வயது மூத்தவர். ஆனால், செயல்பாடுகளை பொறுத்த வரை என்னை விட இளையவர். என்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகங்கள், தற்போதும் அப்படி காட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.” என பேசினார்.

    மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள அகிலேஷ் யாதவ், வரும் காலங்களில் பழைய வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியின் இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தலைவர்களான அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ், சிவ்பால் யாதவ் மற்றும் ஆசாம் கான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×