search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக பணம் டெபாசிட் செய்தவர்களை அச்சுறுத்த கூடாது: நேரடி வரி வாரியம்
    X

    அதிக பணம் டெபாசிட் செய்தவர்களை அச்சுறுத்த கூடாது: நேரடி வரி வாரியம்

    வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்தவர்களை அச்சுறுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுரை கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    செல்லாத நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு எதிரான வேட்டையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் கிளன் மணி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 18 லட்சத்துக்கு மேற்பட்டோரிடம் வருமான வரித்துறை இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் விளக்கம் கேட்டுள்ளது.

    இந்நிலையில், அவர்களை அச்சுறுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுரை கூறியுள்ளது.

    இதுகுறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது பூர்வாங்க சரிபார்த்தல் பணி மட்டுமே. எனவே, ஆன்லைன் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும்போது, வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும். எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பக்கூடாது. நேரில் வரச்சொல்லக்கூடாது. தொலைபேசி வழி விசாரணையும் செய்யக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×