search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்து மாநில தேர்தல் மோடியின் முன்னேற்ற திட்டத்திற்கு உதவியாக இருக்கும்: வெங்கையா நாயுடு
    X

    ஐந்து மாநில தேர்தல் மோடியின் முன்னேற்ற திட்டத்திற்கு உதவியாக இருக்கும்: வெங்கையா நாயுடு

    கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநில தேர்தல்கள் மோடியின் முன்னேற்ற திட்டத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    பனாஜி:

    மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கோவா மாநிலத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘மோடியின் முன்னேற்ற திட்டத்திற்கான வேலைகளை அவர் தொடர்ந்து செய்வதற்காக, அவரது கையை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநில தேர்தல்களின் முக்கிய விஷயமாகும்.

    ஒட்டுமொத்த நாடே வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், சில மாநிலங்கள் பின்தங்கியிருக்கின்றன. ஏனெனில், அவர்கள் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செல்ல மறுக்கிறார்கள் அல்லது சிறப்பாக செயல்படாமல் இருக்கிறார்கள்.

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதை உங்களால் காண முடியும். இருந்தபோதிலும் மத்திய அரசு முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    உத்தர பிரதேசத்தில் ஊழல், அராஜகம் மற்றும் ஓட்டு வங்கி அரசியல்தான் நடைபெற்று வருகிறது. மோடி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். சீர்திருத்தம், மாற்றம் மற்றும் செயல்பாடு என்ற மூன்று மந்திரங்களை அவர் கொடுத்துள்ளார். மோடியால் எடுக்கப்பட்ட முன்முயற்சிக்கான ரிசல்ட் வந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள்.

    இந்தியாவின் பெயர் உலகளவில் உயர்ந்துள்ளது. முதலீடு செய்ய இந்தியா சிறந்த இடமாக உள்ளது. ஒவ்வொரு துறையும் வளர்ச்சியடைந்துள்ளது. மக்களின் அபிலாசைகளை உணர்ந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள்’’ என்றார்.
    Next Story
    ×