search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவ் கட்சி 300 தொகுதியில் போட்டி- காங்கிரசுக்கு 103 இடம் ஒதுக்கீடு
    X

    உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவ் கட்சி 300 தொகுதியில் போட்டி- காங்கிரசுக்கு 103 இடம் ஒதுக்கீடு

    உ.பி. தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 300 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 103 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    லக்னோ:

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    403 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்ட சபைக்கு பிப்ரவரி 11-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

    4-வது கட்சியாக திகழும் காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பவில்லை. அந்த கட்சி அகிலேஷ் யாதவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.

    இதன்படி உத்தரபிரதேச சட்டசபையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதன்படி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 300 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 103 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு விவரம் இன்று வெளியாகும்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகள் போதாது கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம் வலியுறுத்தினர். அவர் கூடுதல் இடங்களை வழங்க இயலாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சமாஜ்வாடி 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் 103 தொகுகளிலும் போட்டியிடும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட ராஷ்டீரிய லோக்தளம் கடைசி நேரத்தில் சேர்க்கப்படவில்லை.

    Next Story
    ×