search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் வாங்கிய கடன்: விஜய் மல்லையா வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
    X

    வங்கிகளில் வாங்கிய கடன்: விஜய் மல்லையா வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடன் தொடர்பான விஜய் மல்லையாவின் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து கடன் வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட பல வங்கிகள் பெங்களூரு கடன் மீட்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    அதில், தங்கள் வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தும்படி விஜய் மல்லையாவுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது. இதற்கிடையே விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பி லண்டனுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம், அந்நிறுவனத்தின் இந்திய தலைவராக பணியாற்றியதற்காக விஜய் மல்லையாவுக்கு 75 மில்லியன் டாலரை வழங்குவதாக அறிவித்தது.

    அந்த தொகையை கோர்ட்டில் டெபாசிட் செய்யும்படி கடன் மீட்பு கோர்ட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அதற்குள்ளேயே 40 மில்லியன் டாலர் விஜய் மல்லையாவின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் கூறியது. இதையடுத்து மீதமுள்ள 35 மில்லியன் டாலரை டெபாசிட் செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சீனிவாசன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருப்பதாக அந்த கோர்ட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×