search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்
    X

    மெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்

    இந்தியாவில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ M ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பலமுறை டீஸ் செய்யப்பட்ட மோட்டோரோலாவின் மோட்டோ M ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரூ.15,999க்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும். 

    மோட்டோ M ஸ்மார்ட்போன் முதன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 20,000 ரூபாய் விலையில் முழுமையான மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் முதல் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் பேக் பேனலில் பொருத்தப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா மோட்டோ M ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1080 பிக்சல் ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P15 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 4GB ரேம், 32GB மற்றும் 64GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்கள் எடுக்க ஏதுவாக 16 எம்பி பிரைமரி கேமரா, PDAF டூயல்-எல்இடி பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுத்த பின் எடிட் செய்ய ஏதுவாக இதர கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. மோட்டோ M ஸ்மார்ட்போன் 3050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. 

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் யுஎஸ்பி டைப்-சி, NFC, மற்றும் அனைத்து இந்திய LTE மோட்களையும் இயக்குகிறது. இத்துடன் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் 360 கோணத்திலும் இசையை அனுபவிக்க முடியும் என லெனோவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×