search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டுகளிலும், பாராளுமன்றத்திலும் ஏன் தேசிய கீதம் பாடக் கூடாது?: உமர் அப்துல்லா
    X

    கோர்ட்டுகளிலும், பாராளுமன்றத்திலும் ஏன் தேசிய கீதம் பாடக் கூடாது?: உமர் அப்துல்லா

    சினிமா தியேட்டர்களில் மட்டுமின்றி, கோர்ட்டுகளிலும், பாராளுமன்றத்திலும் ஏன் தேசிய கீதம் பாடக் கூடாது? என காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்களிலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கட்டாயமாக ‘ஜனகனமன’ என்னும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    திரையரங்கங்களில் தேசிய கொடி பறக்கும் பின்னணியில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பலர் எழுந்துநின்று மரியாதை செலுத்துவது இல்லை என கூறப்படும் கருத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்திருந்தது.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி, நம்நாட்டு தேசிய கீதத்துக்கு இந்திய மக்களே மதிப்பளிக்கவில்லை என்றால் பாகிஸ்தான்காரனா? மரியாதை கொடுப்பான்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதில் அளித்துள்ளார்.

    சினிமா பார்க்கும் மக்களுக்கு மட்டும் தேசபக்தி பாடம் நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள உமர் அப்துல்லா, நீதிமன்றங்கள், மாநில சட்டசபைகள் மற்றும் பாராளுமன்றத்திலும் ஏன்  ஏன் தேசிய கீதம் பாடக் கூடாது? என்றும் வினவியுள்ளார்.
    Next Story
    ×