search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பாதுகாவலரின் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துகொண்டு முன்னாள் எம்.எல்.சி.வின் உறவினர் ஓட்டம்
    X

    காஷ்மீர்: பாதுகாவலரின் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துகொண்டு முன்னாள் எம்.எல்.சி.வின் உறவினர் ஓட்டம்

    ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் எம்.எல்.ஏ.வின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த வீரரின் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துகொண்டு ஓட்டம்பிடித்த முன்னாள் எம்.எல்.சி.வின் உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் எம்.எல்.ஏ.வின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த வீரரின் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துகொண்டு ஓட்டம்பிடித்த முன்னாள் எம்.எல்.சி.வின் உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் மேலவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னர் எம்.எல்.சி.யாக பணியாற்றியவர், ரஹ்மான் துக்ரூ. சோபியான் மாவட்டத்தில் உள்ள துக்ரூ கிராமத்தை சேர்ந்த இவரது உயிருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் அதிகரித்து வந்ததால் ஆயுதமேந்திய போலீசாரை இவரது பாதுகாப்புக்கு மாநில அரசு பணியமர்த்தியது.

    இந்நிலையில், இவரது பாதுகாவலராக பணியாற்றிவந்த முஹம்மது அப்பாஸ் என்பவர் தங்கிருந்த அறையில் இருந்து அவர் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை எடுத்துகொண்டு ரஹ்மான் துக்ரூவின் உறவினரான வாசிம் அஹமது கன்டய் என்பவர் தப்பியோடி விட்டதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கியுடன் 30 ரவுண்டுகள் சுடக்கூடிய அளவுக்கு தோட்டாக்களையும் அவர் அள்ளிச் சென்றுள்ளதாக தெரிகிறது.

    பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கிகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பெருகி வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் இங்குள்ள குல்காம் மாவட்டம், தம்ஹால் ஹான்ஜிபோரா காவல் நிலையத்துக்குள் நுழைந்த ஒருகும்பல் அங்கிருந்து 39 துப்பாக்கிகளை அள்ளிச்சென்றது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×