search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே 10 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்
    X

    திருமங்கலம் அருகே 10 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்

    10 பவுன் மற்றும் ரூ.10 ஆயிரத்துடன் மாயமான 19 வயது பெண், 17 வயது சிறுவனுடன் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ரெங்கபாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 19). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கார் மெண்ட்ஸ் தொழிற் சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற பாண்டிச்செல்வி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் அழகர்சாமி புகார் செய்தார் அதில், வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பாண்டிச்செல்வி எடுத்துச் சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    நகை-பணத்துடன் இளம்பெண் மாயமானதால், அவர் காதல் வயப் பட்டிருக்கலாமா? அல்லது கடத்தப்பட்டு இருக்கலாமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் இடையபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பாண்டிச் செல்வியை அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

    Next Story
    ×