search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு - சென்னை மண்டலம் 92.93 சதவீதம் தேர்ச்சி
    X

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு - சென்னை மண்டலம் 92.93 சதவீதம் தேர்ச்சி

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மண்டலம் 92.93 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. #CBSE #CBSE12thResults
    சென்னை:

    மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ஆண்டுதோறும் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி தேர்வு முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 13 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

    தமிழகம், புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவுகள் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வினை எழுதி இருந்தனர்.

    வழக்கமாக சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் 3-வது வாரம் வெளியாகும். இந்த ஆண்டும் மே 3-வது வாரம்தான் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணி அளவில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டது. மத்திய கல்வி வாரியம் டெல்லியில் முடிவுகளை வெளியிட்டது.

    தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 83.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.70 சதவீதமும், மாணவர்கள் 79.04 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்களை விட மாணவிகள் 9 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் 2 மாணவிகள் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா என்ற மாணவியும், முசாபர் நகர் பள்ளியைச் சேர்ந்த கரிஷ்மா என்ற மாணவியும் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பெற்றுள்ளனர்.

    மண்டலங்களில் திருவனந்தபுரம் சி.பி.எஸ்.இ. மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு தேர்வு எழுதியவர்களில் 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை மண்டலம் 92.93 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி மண்டலத்தில் 91.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #CBSE #CBSE12thResults

    Next Story
    ×