search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 18-ந்தேதி நடக்கிறது
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 18-ந்தேதி நடக்கிறது

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 18ந் தேதி அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

    தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அம்மா திட்ட முகாமை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 18ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடக்க உள்ளன.

    தூத்துக்குடி தாலுகாதெற்குசிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை, ஸ்ரீவைகுண்டம் தாலுகாதெய்வச் செயல்புரம், செட்டிமல்லன்பட்டி, திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம், சாத்தான்குளம் தாலுகா புதுக்குளம், கோவில் பட்டி தாலுகா வடக்குப்பட்டி, விளாத்திகுளம் தாலுகாஎம்.சுப்பிரமணியபுரம், மாதராஜபுரம், எட்டயபுரம் தாலுகாமஞ்சநாயக்கன்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகாகொடியன்குளம், கயத்தாறு தாலுகாஓணமாக்குளம், ஏரல் தாலுகாஇருவப்பபுரம் ஆகிய பகுதிகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம்கள் நடக்க உள்ளது.

    இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்புஇறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றுகள், வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×