search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
    X

    அரூர் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

    மொரப்பூர் வனத்துறையினர் மற்றும் அரூர் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து அரூர் காப்புகாடு பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    அரூர்:

    மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், இளநிலை உதவியாளர் சம்பத், வாதாப்பட்டி வனவர் வேடியப்பன் முன்னிலையில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் பேருராட்சி பணியாளர்கள் இணைந்து அரூர், கடத்தூர் சாலையில் உள்ள குரங்குப்பள்ளம் வனப்பகுதியில் குடிமகன்களால் வீசப்படும் பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் டம்ளர்கள், கோழி கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றினர்.

    இது குறித்து வனத்துறை அலுவலர் கூறியதாவது:-

    வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மது அருந்துதல், பிளாஸ்டிக் பொருட்கள் போடுதல், இறைச்சி கழிவுகளை கொட்டுதல் போன்று சுற்றுசூழலுக்கு அபாயம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×