search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரடி தாக்கியதில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர் நடராஜ்
    X
    கரடி தாக்கியதில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர் நடராஜ்

    கோத்தகிரியில் கரடிகள் தாக்கி ஆசிரியர் காயம் - பொதுமக்கள் பீதி

    கோத்தகிரியில் கரடிகள் தாக்கி ஆசிரியர் காயம் அடைந்த சம்பவத்தையடுத்து பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகரி வனச்சரகத்துக்கு உட்பட்ட சோலூர் மட்டம் சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (48). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சோலூர் மட்டம் சாலையில் அமைந்துள்ள கோழி மரஹாடாவில் தனது தேயிலை தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 கரடிகள் திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடராஜை தாக்கியது.

    இதில் நடராஜின் கை, கால் மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடிகளை கல் வீசி துரத்தினார்கள்.

    பின்னர் நடராஜை மீட்டு கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கரடி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொத்த முக்கை பகுதியை சேர்ந்த தம்பதி கரடி தாக்கியதில் உயிர் இழந்தனர். அதே போல் அதன் சுற்றுப்புற பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் கரடி தாக்கி காயம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது-

    கீழ் கோத்தகிரி வனச்சரகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் 16 வன ஊழியர்கள் பணியில் இருந்தனர். தற்போது சிலர் மட்டுமே உள்ளனர். தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் பணி புரிகின்றனர்.

    கூடுதல் ஊழியர்களை பணி அமர்த்தினால் மட்டுமே விலங்கு-மனித மோதலை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கரடிகள் நடமாட்டத்தை தொடர்ந்து கீழ் கோத்தகிரி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.



    Next Story
    ×