search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
    X

    காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

    ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் கோவிலின் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதிகளில் மளிகை கடை, ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மளிகை கடை, ஓட்டல்கள், அன்னதானம் செய்யுமிடம் மற்றும் தற்காலிக குளிர்பான கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. உணவகங்களில் பிளாஸ்டிக் சம்பந்தமான காபி கப்பு, பாலித்தீன் பை போன்றவற்றை உபயோகப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. 
    Next Story
    ×