search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்கள் மோதல் - நீதிபதிகள் நேரில் சமரசம்
    X

    செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்கள் மோதல் - நீதிபதிகள் நேரில் சமரசம்

    செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கோர்ட்டில் இருந்து நீதிபதிகள் நேரில் சென்று 2 சிறுவர்களையும் சமாதானப்படுத்தினார்கள்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு டவுன் பகுதியில் சமூக நலத்துறை சார்பில் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இயங்கி வருகிறது. சிறுவயதில் குற்றம் புரிந்தவர்கள், தண்டனை பெற்ற சிறுவர்கள் என 59 பேர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் நெல்லை, குமரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இங்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    நேற்று இரவு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 2 சிறுவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதல் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து நீதிபதிகள் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுவர்களையும் சமாதானப்படுத்தினார்கள்.

    பின்னர் 2 சிறுவர்களும் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×