search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விசைத்தறி தொழில் பாதிப்பு
    X

    ஆண்டிப்பட்டியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விசைத்தறி தொழில் பாதிப்பு

    அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆண்டிப்பட்டியில் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு வருவதாக நெசவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பகுதிகளான ஜக்கம்பட்டி, சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கொப்பையம்பட்டி, சண்முக சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000த்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளது.

    இந்த விசைத்தறி கூடங்கள் நம்பி 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செயப்படும் வேட்டி,சேலைகள், துண்டு, ஐய்யப்ப , முருகபக்தர்கள் அணியும் கருப்பு நீல நிற வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்து வதற்காக எம்.ஜி.ஆர் பொங்கல் திருநாளன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆண்டிபட்டி பகுதியில் வேஷ்டி, சேலைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் நெசவுத்தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்றும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டே வருவதால் மின்வெட்டு காரணமாக தங்களால் சேலைகள் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும், இதனால் தங்களுக்கு இந்த வருடம் தீபாவளி பண்டிகை கருப்பு தீபாவளியாக இருக்கும் என்று தெரிவித்த நெசவாளர்கள்,

    ஒரு நாளைக்கு ரூ. 300-க்கு வேலை செய்யும் நாங்கள் தற்போது மின்வெட்டு காரணமாக ரூ.100-க்கு கூட வேலை செய்ய முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

    மேலும் மின் அழுத்த வேறுபாடு காரணமாக விசைச்தறி எந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஒரு முறை பழுது ஏற்பட்டால் ரூ.5000த்திற்க்கும் மேல் செலவு ஏற்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை என்று நெசவாளர்கள் ஆதங்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×