search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
    X

    நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

    நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு உதவி இயக்குநரின் பரிந்துரைப்படி கால்நடைகளுக்கான சிறப்பு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது.

    முகாமில் நொய்யல், கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் டாக்டர் உஷா தலைமையில் மருந்தக உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, நொய்யல் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும், 3 மாதங்க ளான கன்றுகளுக்கும் தடுப்பூசி போட்டனர்.

    டாக்டர் உஷா கோமாரி நோய் கால்நடைகளை தாக் காமல் இருப்பதற்கான வழி முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

    Next Story
    ×