search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    சம்பள உயர்வு கேட்டு கோவையில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 7 என்.டி.சி. மில் தொழிலாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று 16-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    கோவையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாலை தொழிலாளர்கள் இன்று காட்டூரில் உள்ள தேசிய பஞ்சாலை தொழிலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஒரு பெண் உள்பட 30 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் வருகிற 8-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண கோரி தேசிய பஞ்சாலை எல்.பி.எப். தொழிற் சங்கத்தினர், கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ.விடம் நேரில் மனு அளித்தனர்.இதில் எல்.பி.எப். துணை பொது செயலாளர் சிவகுமரன், அலெக்சாண்டர், செந்தில் நாதன், சக்திவேல், செல்வராஜ், மேகநாதன், ராமசாமி, சாமிநாதன், யுவராஜ், மோகன்லால், செந்தில்குமார், கணேசன், நாகநாத சேதுபதி, மகாலிங்கம், ஜான் பீட்டர் மற்றும் எல்.பி.எப். தேசிய பஞ்சாலை தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×