search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டின் ஓரம் கொட்டப்பட்டு கிடக்கும் சாய திடக்கழிவுகள்.
    X
    ரோட்டின் ஓரம் கொட்டப்பட்டு கிடக்கும் சாய திடக்கழிவுகள்.

    சென்னிமலை அருகே ரோட்டோரத்தில் கொட்டப்பட்ட சாய திடக்கழிவுகள்

    சென்னிமலை அருகே ரோடு ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள சாய திடக்கழிவுகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட, கிழக்கு புதுப்பாளையம் ஊருக்கு அருகில் மைலாடி செல்லும் ரோட்டின் ஓரத்தில் அடுப்பு சாம்பல் உடன் சாய பட்டறைகளில் உருவாகும் அடர் சாயக் கழிவுகளை கலக்கி மூட்டை, மூட்டையாக கட்டி ரோட்டின் ஓரமாக மர்ம நபர்கள் கொட்டி சென்று உள்ளனர்.

    இந்த சாயப்பட்டறை அடர் கழிவுகளை சேகரித்து வைத்து இதை சுத்தரிப்பு செய்ய கும்முணி பூண்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை அனுப்ப வேண்டும் அப்படி செய்யாமல் இப்படி பொறுப்பு இன்றி ரோட்டின் ஓரத்தில் கொட்டி செல்லப்பட்டுள்ளது. இது இந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே இந்த பகுதிகளில் சாயப்பட்டறைகள் சம்பந்தமாக பலமுறை மக்கள் புகார் கொடுத்தும், இரண்டு முறை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சாயப்பட்டறை முதலாளிகள் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கூறினர்.



    Next Story
    ×